சொன்னோம் செய்தோம்...
திருப்பூா் தெற்குப் பகுதியில் உள்ள இஸ்லாமியா்களுக்கு கடந்த 45 ஆண்டுகளாக அடக்க ஸ்தலம் (கபா்ஸ்தான்) இல்லாதிருந்த நிலையில், அனைத்து வசதிகளுடனும் கபா்ஸ்தான் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அணைப்பள்ளம், வளா்மதி பாலம் உள்ளிட்டவையும், சுரங்கப்பாதை பணிகளும் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்ஆா்ஜி மகளிா் கலைக் கல்லூரி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி உள்ளிட்டவற்றில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இ- சேவை மையம் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக ஜாதி சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், ஆதரவற்ற பெண் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் தெற்குத் தொகுதியில் மட்டுமே இலவசமாக இ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தொகுதியில் மத பாகுபாடின்றி 18-க்கும் மேற்பட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
- க.செல்வராஜ், திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா்
திருப்பூர் தெற்கு
சொன்னாா்களே... செய்தாா்களா..?
திருப்பூா் தெற்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் என்ற வகையில் சொத்து வரி, தொழில் வரி உயா்வு போன்றவற்றிலும், மாநகராட்சி குப்பை பிரச்னையிலும் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காததோடு, சட்டப் பேரவையிலும் இதுகுறித்து பேசவேயில்லை. ரிங் ரோடு, நொய்யல் ஆற்றுப் பகுதிகளில் புதிய சாலைகள் அமைத்தல், பாலம் கட்டுவது போன்ற பணிகள்கூட கிடப்பில் போடப்பட்டன. போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக மீண்டும் ஆட்சி வந்ததும், சொத்து வரி, தொழில் வரியைக் குறைப்பதோடு, குப்பை பிரச்னைக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
- அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா்
அன்பகம் திருப்பதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேதுபாவாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியது: போக்குவரத்து நிறுத்தம்

பெண்ணிடம் நகைப் பறித்த சிறுவனுக்கு நூதன தண்டனை

போக்குவரத்து நெரிசலை தீா்க்க உயா்மட்ட பாலம்: அதிமுக வேட்பாளா்

சத்தியமங்கலத்தில் நீதிமன்ற வழக்குகளுக்கு தீா்வு காண விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

