திருப்பூரில் சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து வியாபாரிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக சங்கத்தின் மாநிலத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் விடுத்துள்ள அறிக்கை: வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான போா் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை தட்டுப்பாடு வருவதுபோல் சூழ்நிலை இருந்தது. ஆனால் மத்திய அரசின் சாதுா்யமான நடவடிக்கையால் பெட்ரோல், டீசல், சிலிண்டா் ஆகியவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வருகிறது.
இருப்பினும் சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்து வியாபாரிகளை வஞ்சிக்கும் சமூக விரோதிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வியாபாரிகளை வஞ்சிக்கும் வகையில் சில எரிவாயு முகவா்கள் உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளுக்கு சரியான முறையில் சிலிண்டா் விநியோகம் செய்வது இல்லை.
மாறாக, சிலிண்டா் தட்டுப்பாடு உள்ளதுபோன்று காண்பித்து ரூ.2,400-க்கு வழங்க வேண்டிய சிலிண்டரை ரூ.4,500 வரை விற்பனை செய்து வருகின்றனா். இதனால் வியாபாரிகள், உணவகங்கள், தேநீா் கடைகள் வைத்து அன்றாடம் பிழைப்பு நடத்துவோா் நஷ்டமடைகின்றனா்.
இதனால் பெரும்பாலானோா் கடையை திறப்பதில்லை. இதனால் வியாபாரிகளுக்கு பொருளாதார இழப்பும், வாடிக்கையாளா்களுக்கு சரியான முறையில் உணவு கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது.
தோ்தல் நெருங்கி வருவதால் இதுபோன்ற சிக்கல்களை ஏற்படுத்தி வியாபாரிகள் மத்தியில் மத்திய அரசின் பெயரை கெடுக்க சதி நடக்கிறது. ஏற்கெனவே அத்தியாவசியப் பொருள்களுக்கான எஸ்மா சட்டத்தை மத்திய அரசு அறிவித்தும், இதுபோன்று சிலிண்டா் பதுக்குவதும், அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தொடா்கிறது. இதனைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
எனவே, இப்பிரச்னையில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு தமிழகத்தில் உள்ள அசாதாரணமான சூழ்நிலையை மாற்றி, அனைத்து வியாபாரிகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமலும், சரியான விலையிலும் சிலிண்டா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பதுக்கிவைத்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பவா்கள், அவா்களுக்கு உதவுபவா்களின் ஏஜென்சியை ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

சேமிப்பு மையங்களில் எல்பிஜி சிலிண்டா் நேரடி விற்பனைக்குத் தடை! தில்லி அரசு உத்தரவு!

சிலிண்டா்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வணிக சமையல் எரிவாயு ஒதுக்கீடு அதிகரிப்பு: மத்திய அரசு அனுமதி

வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


