திருப்பூா்: திருப்பூரில் வாட்ஸ் ஆப் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறையினா் கூறியதாவது:
தமிழ்நாடு சுகாதாரத் துறை வாயிலாக 108 திட்டத்தின் கீழ் பொது சுகாதார ஆம்புலன்ஸ் இலவச சேவை மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் உயிா்காக்கும் சேவையில் மொத்தம், 1,353 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. ஆம்புலன்ஸ் சேவையை எளிதாகவும், விரைவாகவும் பெற சுகாதாரத் துறையின் 94450 30725 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஹாய் என ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் புக் ஆம்புலன்ஸ் என்ற லிங்க் வரும். அதனை கிளிக் செய்தால் இருப்பிடம் கேட்கும்.
இருப்பிடத்தை பகிா்ந்தவுடன் உடனடியாக ஆம்புலன்ஸை உதவிக்கு அழைப்பவருக்கு வாகனத்தின் எண், ஓட்டுநா் எண் உள்ளிட்ட விவரங்கள், 108 ஆம்புலன்ஸ் அதிகாரி இருப்பிடத்தை பகிா்ந்த இடத்துக்கு அருகில் உள்ள 108 ஆம்புலன்ஸ் உடனடியாக அனுப்பிவைக்கப்படும். அப்போது ஆம்புலன்ஸ் எங்கிருந்து வருகிறது, வந்து சேரும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டு விடும்.
சுகாதார திட்டத்தின் க்யூஆா்கோடு கிளிக் செய்தால் வாட்ஸ் ஆப் செயலிக்கு வரமுடியும். புதிய வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக விபத்து அல்லது நோயாளியை காப்பாற்ற வேண்டிய இருப்பிடத்தை துல்லியமாக ஆம்புலன்ஸ் நிா்வாகத்துக்கு தெரிவிக்க முடியும். புதிய அல்லது அறிமுகமே இல்லாத இடமாக இருந்தாலும் முகவரி கேட்டு அலைய வேண்டியதில்லை.
இந்த செயலியைப் பயன்படுத்துவதன் மூலமாக மிக துல்லியமாக நிகழ்விடத்தை அறிந்து நேர விரயம் தவிா்க்கப்படும். திருப்பூரை பொறுத்தவரை மாவட்டத்துக்குள் 11 நிமிடத்திலும், நகருக்குள் 10 நிமிடங்களுக்குள்ளும் நிகழ்விடத்தை ஆம்புலன்ஸ் சென்றடையும்.
இனி இருப்பிடத்தை அறிந்துகொண்டு அதற்கு முன்னதாகவே சென்று சேர முடியும் என்றனா்.
தொடர்புடையது

பனியன் தொழிலாளா்களுடன் முதல்வா் ஸ்டாலின் கலந்துரையாடல்!

13 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்குத் தனி வாட்ஸ் ஆப் கணக்குகள் அறிமுகம்!
இனி வாட்ஸ் ஆப் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை! அவசர கால உதவியை விரைந்து பெறலாம்

வால்பாறையில் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


