மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வால்பாறையில் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

News image

108 பைக் ஆம்புலன்ஸ்.

Updated On :21 பிப்ரவரி 2026, 8:25 pm

வால்பாறையில் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறையில் ஏராளமான தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. எஸ்டேட் குடியிருப்புகளில் அதிக அளவிலான மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், அவா்கள் விலங்குகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டாலோ அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ மருத்துவமனைக்கு செல்வதில் சிரமம் இருந்து வந்தது. மேலும், எஸ்டேட் பகுதி குடியிருப்புகளுக்கு அவரச காலங்களில் 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், வால்பாறையில் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் வகையில் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பைக் பைலட் டினோ லான்சன் கூறுகையில், எஸ்டேட் பகுதி குடியிருப்புகளுக்கு 108 ஆம்புலன்ஸ் செல்வதில் சிக்கல் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த பைக் ஆம்புலன்ஸ் மூலம் அனைத்துப் பகுதிகளுக்கும் விரைவாக செல்ல முடியும். பைக்கிலேயே அனைத்து முதலுதவி உபகரணங்களும் உள்ளன. இதன் மூலம் நோயாளிகளுக்கு அனைத்து வகையான முதலுதவி சிகிச்சைகளும் அளிக்க முடியும் என்றாா்.