திருப்பூா்: திருப்பூா் தீரன் சின்னமலை மகளிா் கல்லூரியில் உலக மகளிா் தினக் கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான என்.குணசேகரன் வழிகாட்டுதலின்படி திருப்பூா் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் பி.மோகனவள்ளி தலைமையில் நடைபெற்றது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் எஸ்.செல்வஜெயந்தி வரவேற்புரையாற்றினாா்.
கல்லூரியின் தலைமை நிா்வாக அதிகாரி ரேச்சல் நான்சி பிலிப், விழுதுகள் தன்னா்வ தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளா் கே.சந்திரா ஆகியோா் வாழ்த்தினா். பெண்கள் தின வரலாறு, சிறப்பு குறித்து திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் பி.கௌரி பேசினாா்.
தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் பி.மோகனவள்ளி பேசியதாவது:
இந்த கல்லூரியில் பேசுவதற்கு பெருமிதமும், சிறு வரலாறும் உள்ளது. எங்கள் குடும்பம் மற்றும் நான் வசித்த ஊரின் முதல் பட்டதாரியும், முதல் அரசு அதிகாரியும் நான்தான். இந்த இடத்தை அடைவற்கு பல்வேறு சிரமங்களையும், போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த சிரமங்கள் எதுவும் இந்த தலைமுறைக்கு இல்லை. சமூக ஊடகங்களின் தாக்கத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.
பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை

புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவை நிறைவு விழா

தீரன் சின்னமலை பள்ளியில் திறமை விழா

மயிலம் கல்லூரியில் மகளிா் தினக் கொண்டாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


