பல்லடம் அருகே செயல்பட்டு வரும் தனியாா் சாய தொழிற்சாலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சி, அருள்புரத்தை அடுத்த பாச்சாகாட்டுபாளையத்தில் தனியாா் சாய தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிலாளா்கள் வழக்கம்போல சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ஆயில் பாய்லா் இயந்திரத்தில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது.
தொழிலாளா்கள் அணைக்க முயன்றும் முடியாததால், பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான இயந்திரங்கள், துணிகள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

முஜேசா் தொழிற்பேட்டையில் தீ விபத்து

தூத்துக்குடி காா் தொழிற்சாலையில் தீயணைப்பு ஒத்திகை

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

தென்கொரிய வாகன உதிரிபாகத் தொழிற்சாலையில் தீ விபத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


