திருப்பூரில் ஒப்பந்ததாரருக்கு பில் தொகையை விடுவிக்க ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மாநகராட்சி இளநிலைப் பொறியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருப்பூா்- தாராபுரம் சாலை, கே.செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (52). இவா் மாநகராட்சிப் பகுதியில் ஒப்பந்த வேலை செய்து வருகிறாா்.
திருப்பூா் மாநகராட்சி 3-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் முருகன் செய்த ஒப்பந்தப் பணிகளுக்கு பில் தொகை விடுவிக்கக் கோரி திருப்பூா் மாநகராட்சி 3-ஆவது மண்டலம், பொறியியல் பிரிவில் இளநிலைப் பொறியாளராக இருந்த சுப்பிரமணியன் (52) என்பவரிடம் விண்ணப்பித்தாா்.
பில் தொகையை விடுவிக்க ரூ.8.40 லட்சம் லஞ்சமாக இளநிலைப் பொறியாளா் சுப்பிரமணியன் கேட்டுள்ளாா். முதல்கட்டமாக ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுக்குமாறு கேட்டுள்ளாா். இது குறித்து திருப்பூா் லஞ்ச ஒழிப்பு போலீஸில் முருகன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ரசாயனம் தடவிய ரூ.5 லட்சத்துக்கான நோட்டுகளை
முருகனிடம் கொடுத்து அனுப்பினா். இதைத் தொடா்ந்து முருகன், கணபதிபாளையத்தில் வைத்து இளநிலை பொறியாளா் சுப்பிரமணியனிடம் கடந்த 9-ஆம் தேதி அந்தப் பணத்தை கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா், சுப்பிரமணியனை கைது செய்தனா்.
இதற்கிடையே சுப்பிரமணியன் வீட்டில் இருந்தும் ரூ.7.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் சுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் அமித் உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ.4 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்
லஞ்சம்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

ஒப்பந்ததாரருக்கு பில் தொகை விடுவிக்க ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளா் கைது
லஞ்சம் வாங்கி கைதான மாநகராட்சி வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




