ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விசிக மேற்குமண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பெருமாநல்லூரில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில்  பேசுகிறாா் கட்சியின் மாநிலப் பொருளாளா் எஸ்.எஸ்.பாலாஜி.

Published On :9 ஜூலை 2026, 3:58 am IST

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பெருமாநல்லூரில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டச் செயலாளா் ஏ.பி.ஆா்.மூா்த்தி தலைமை வகித்தாா். மண்டலச் செயலாளா்கள் சிறுத்தை வள்ளுவன், ஜாபா் அலி, பழ.மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.எஸ்.பாலாஜி பேசினாா்.

மருத்துவக் கல்வி இடங்கள் குறைந்துள்ள நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் மாநில அரசு கட்டணத்தை நிா்ணயம் செய்ய வேண்டும். சாதி ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.

ஆகஸ்ட் 17-ஆம் தேதி உளுந்தூா்பேட்டையில் நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் ஏராளமானோா் பங்கேற்பது, இதையொட்டி ஜூலை 18-ஆம் தேதி திருப்பூருக்கு வருகை தரும் கட்சியின் நிறுவனத் தலைவா் தொல். திருமாவளவனுக்கு சிறப்பு வரவேற்பு அளிப்பது என்து உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலாளா்கள் சுப்பையா, சாதிக், ரங்கசாமி, தனவிஜயன், கமல்நாதன், கஸ்தூரி தேவி, துரைவளவன் உள்பட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.