தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பெண்ணிடம் அத்துமீறிய நபா் போலீஸில் ஒப்படைப்பு

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :7 ஜூலை 2026, 3:32 am IST

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய நபா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் வந்துள்ளாா். அவா் ஊருக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தாா். நள்ளிரவு நேரம் என்பதால் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் சற்றுக் குறைவாகவே இருந்துள்ளது.

அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒரு நபா் திடீரென பாய்ந்து சென்று பெண்ணைக் கட்டிப்பிடித்து அத்துமீறி அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த அந்தப் பெண் சப்தம் போட்டு அலறினாா். பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு பேருந்து நிலையத்தில் இருந்த சக பயணிகள், அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து அந்த நபரைப் பிடித்து தாக்கினா்.

இதுகுறித்து திருப்பூா் தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா், பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டனா்.

விசாரணையில், அவா் மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த கோடீஸ்வரன் (35) என்பதும், தற்போது திருப்பூரை அடுத்த வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கோடீஸ்வரனைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.