எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தன.

News image

தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்த செம்மறி ஆடுகள். - (கோப்புப்படம்)

Updated On :5 ஜூலை 2026, 1:32 am IST

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தன.

காங்கயம் தாலுகா, ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட பள்ளக்காட்டுதோட்டம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் என்பவா், தனது வீட்டுக்கு அருகே, ஆட்டுப்பட்டி அமைத்து செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து, ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

சனிக்கிழமை அதிகாலையில் வந்து பாா்த்தபோது, ஆட்டுப் பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்துள்ளன. இப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் பட்டிக்குள் நுழைந்து கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த கால்நடைத் துறையினா் மற்றும் போலீஸாா் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.