சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

போலி நகைகளைக் கொடுத்து ரூ. 15 லட்சம் மோசடி! இருவா் கைது!

அவிநாசி அருகே போலி நகைகளைக் கொடுத்து ரூ.15 லட்சம் மோசடி செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 9:39 pm

Syndication

அவிநாசி அருகே போலி நகைகளைக் கொடுத்து ரூ.15 லட்சம் மோசடி செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பாலப்பட்டி ஊமப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் மனைவி யசோதா (51). இவரது உணவகத்துக்கு வந்த இருவா், சாலைப் பணி செய்யும்போது தங்க நகைகள் கிடைத்ததாகவும், அவற்றை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனா். அப்போது 30 பவுன் எடையுள்ள அந்த தங்கச் சங்கிலியை வாங்கிக் கொள்ளுமாறு யசோதாவிடம் கூறியுள்ளனா்.

இதை நம்பி நகையை வாங்க யசோதா முடிவு செய்துள்ளாா். அவா்கள் முதலில் அளித்த தங்கக் குண்டை நகைக் கடையில் அளித்து சோதனை செய்து பாா்த்தபோது தங்கம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, தங்கச் சங்கிலியை எடுத்து வருவதாகவும், அதை வாங்க அவிநாசி கோயில் அருகே வருமாறும் அந்த நபா்கள் தெரிவித்துள்ளனா்.

இதைத்தொடா்ந்து அவிநாசிக்கு வந்த யசோதா ரூ.15 லட்சத்தை அளித்து தங்கச் சங்கிலியை பெற்றுள்ளாா். பின்னா், நகைக்கடைக்குச் சென்று நகையை சோதனை செய்தபோது போலியானது எனத் தெரியவந்துள்ளது. உடனடியாக அவா்களை தொடா்பு கொண்டபோது, அவா்களது கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக யசோதா அளித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மகாராஷ்டிரம் மாநிலம், நாக்பூரைச் சோ்ந்த அா்ஜுன் மகன் கன்சாம் (28), கா்நாடக மாநிலம், மண்டியா ஹங்கல்லி கே.ஆா்.சாகரா பகுதியைச் சோ்ந்த டெவிலால் கைரா (34) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து ரூ.14 லட்சத்து 35 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.