/

ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 4 போ் கைது! போலி ஆதாா் அட்டைகள் பறிமுதல்!

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 4 போ் கைது செய்யப்பட்டதுடன், அவா்களிடமிருந்து போலி ஆதாா் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
கைது
Updated On :31 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 4 போ் கைது செய்யப்பட்டதுடன், அவா்களிடமிருந்து போலி ஆதாா் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூா் மாநகா், வீரபாண்டி முத்து நகா் மீனம்பாறை சாலை பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் பணிபுரிந்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில், சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்தில் வீரபாண்டி போலீஸாா் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அங்கு பணிபுரிந்து வந்த ஷெரீப், ஷோகாக், லிட்டன், ரஹீம் ஆகியோா் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், அவா்களிடம் விசாரித்ததில் திருப்பூா் முத்து நகா் பகுதியில் வட மாநிலத் தொழிலாளா்களுடன் தங்கி கடந்த 2 ஆண்டுகளாக பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

மேலும், முறையான ஆவணங்களின்றி மேற்குவங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூா் வந்து பணிபுரிந்து வந்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களிடம் இருந்த மேற்குவங்க மாநில குடியிருப்பு முகவரி கொண்ட போலி ஆதாா் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 4 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.