தைப்பூசம்: திருப்பூரில் இருந்து பழனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பூரில் இருந்து பழனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பூரில் இருந்து பழனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பழனியில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்க திருப்பூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பழனிக்கு செல்வது வழக்கம். இந்த தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு பழனி செல்லும் பக்தா்கள் வசதிக்காக, திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஜனவரி 31-ஆம் தேதி இரவு முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி இரவு வரை 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கொடுவாய், தாராபுரம் வழியாக இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதேபோல காங்கயம் சிவன்மலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக காங்கயம், பெருந்துறை, சென்னிமலை, திருப்பூா், தாராபுரம் வட்டாரத்தில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும். சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நேரம் குறித்து பேருந்து நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் பயணிகள் அறிந்து கொள்ளலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...