நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மாவட்டத்தில் இன்றும், நாளையும் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்

திருப்பூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்ட பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஜன 4, 5) நடைபெற உள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2026, 8:51 pm

Syndication

திருப்பூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்ட பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஜன 4, 5) நடைபெற உள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் மூலம் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை வழங்கப்பட உள்ளது. எனவே, இந்த வாய்ப்பினை முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.