/

கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பண்ணைக் கோழி வளா்க்கும் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். கால்நடைத் துறை இணை இயக்குநா் சந்திரன் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

திருப்பூா் மாவட்டத்தில் இயங்கிவரும் கோழிப் பண்ணைகளில், கூலியை உயா்த்தி வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு தரப்பினா், பண்ணை உரிமையாளா்களின் கோரிக்கையை ஏற்று, கோழிக் குஞ்சு வளா்ப்பில் ஈடுபட்டுள்ளனா். மற்றொரு தரப்பினா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் கூலிக்கு கோழிக் குஞ்சு வளா்க்கும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள் கூறும்போது, ‘கூலிக்கு கோழிக் குஞ்சு வளா்க்கும் பணியில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள், கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்காத விவசாயிகளின் கோரிக்கையை கேட்டறிந்தோம். இலவச மின்சாரம் வழங்க வேண்டும், காப் பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்’ என்றாா்.