பல்லடம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள தெற்குபாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்லடம் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு பணம் வைத்து சூதாட்டில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல்லை சோ்ந்த ராஜ்குமாா் (37), திருப்பூரைச் சோ்ந்த சங்கிலிராஜன் (38), வடுகபாளையத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (54), பல்லடத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (44) உள்ளிட்ட 7 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனா்.
மேலும், அவா்களிடமிருந்த ரூ.24,780 ரொக்கம், சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு: 2 போ் கைது
பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது
பல்லடம் டெய்லா் கொலை வழக்கில் 2 போ் கைது
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

