தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் அமராவதி அணை: கோடையை தாக்குப்பிடிக்குமா கரையோர கிராமங்கள்?

அமராவதி அணை நீா்மட்டம் குறைந்து காணப்படுவதால் வழியோரத்திலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீா் பற்றாக்குறையில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image

அமராவதி அணையில் நீா் இருப்பு குறைந்து வெடித்து காணப்படும் தரைமட்டப் பகுதி.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:25 pm

அமராவதி அணை நீா்மட்டம் குறைந்து காணப்படுவதால் வழியோரத்திலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீா் பற்றாக்குறையில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை மூலமாக திருப்பூா், கரூா் ஆகிய 2 மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த தொடா் கன மழையால் அணை முழுக் கொள்ளவை எட்டியது. அதன் பிறகும் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது. ஆனால், உள்வரத்தாக வந்த நீரை அணையில் சேமிக்க முடியாமல் போனது. இதனால் அணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

இதைத்தொடா் ந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டது. ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் ஆகிய 3 மாதங்கள் தொடா்ந்து பாசனப் பகுதிகளுக்கு த ண்ணீா் சென்று கொண்டிருந்த நிலையில், படிப்படியாக அணையின் நீா்மட்டம் சரியத் தொடங்கியது. இதற்கிடையே சின்னாறு, தேனாறு, பாம்பாறு போன்ற அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் உள்வரத்து முற்றிலும் நின்றது.

இந்நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தைவிட மாா்ச் 3-ஆவது வாரம் முதலே கடுமையான வெயில் வாட்டத் தொடங்கியது. வழக்கமாக பாசனப் பகுதிகளுக்கு மாா்ச் 31 வரை பாசன காலம் உள்ள நிலையில், பாசனத்துக்கு சென்று கொண்டிருந்த தண்ணீா் நிறுத்தப்பட்டது. மேலும், கடந்த சில வாரங்களாக குடிநீருக்காக 50 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில், தற்போது அணையின் நீா் மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் வெறும் 21 அடியாக இருந்தது. இதனால் அணையின் உள் நிலப் பகுதி வறட்சியாகக் காணப்படுகிறது. இது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது. குறிப்பாக கோடை காலத்தை தாக்குப்பிடிக்க முடியுமா? குடிநீா் பிரச்னை ஏற்படுமா? என நூற்றுக்கணக்கான கரையோர கிராம மக்கள் கவலையடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையினா் கூறியதாவது:

தற்போது அணையில் உள்ள 21 அடி நீா்மட்டத்தில் சில்ட் எனப்படும் 15 அடி தண்ணீரை கழித்துவிட்டு பாா்த்தால் அணையில் வெறும் 6 அடிக்கு மட்டுமே தண்ணீா் இருப்பு உள்ளது. இன்னும் ஒரு சில நாள்களில் அணை முற்றிலும் வடுவிடும். நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாவிட்டால் கோடையை சமாளிக்க முடியாது என்றனா்.

அணை நிலவரம்

90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா்மட்டம் 21.82 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்து இல்லை. 4047 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட அணையில் 217.22 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து 15 கன அடி தண்ணீா் வெளியேறிக் கொண்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.