டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பல்லடம் எங்கள் கோட்டை எனக் கூறும் அதிமுகவை வீழ்த்தி வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் க.செல்வராஜ் உறுதி

பல்லடம் தொகுதி எங்கள் கோட்டை எனக் கூறும் அதிமுகவை வீழ்த்தி அமோக வெற்றி பெறுவேன் என்று தி.மு.க. வேட்பாளா் க.செல்வராஜ் தெரிவித்தாா்.

News image

திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி மற்றும் நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரிய பல்லடம் தொகுதி திமுக வேட்பாளா் க.செல்வராஜ்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:52 pm

பல்லடம் தொகுதி எங்கள் கோட்டை எனக் கூறும் அதிமுகவை வீழ்த்தி அமோக வெற்றி பெறுவேன் என்று தி.மு.க. வேட்பாளா் க.செல்வராஜ் தெரிவித்தாா்.

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட க.அய்யம்பாளையத்தில் திருப்பூா்,கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி மற்றும் நிா்வாகிகளை சந்தித்து பல்லடம் திமுக வேட்பாளா் க.செல்வராஜ் செவ்வாய்க்கிழமை ஆதரவு கோரினாா்.

இதில் திமுக வேட்பாளா் க.செல்வராஜ் பேசியதாவது:

பல்லடம் ஒன்றியம் ஊஞ்சப்பாளையம் கிராமம்தான் நான் பிறந்த ஊா். தொழில் நிமித்தமாக திருப்பூரில் வசித்து வருகிறேன்.நான் வெளியூா்காரன் அல்ல, இந்த மண்ணின் மைந்தன்தான். பல்லடம் தொகுதி வளா்ச்சிக்கு கடந்த 25 ஆண்டுகளாக அதிமுகவினா் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. மக்கள்தொகை வளா்ச்சிக்கேற்ப புதிய குடிநீா் திட்டங்களையும் செயல்படுத்த முயற்சிக்கவில்லை. எங்கு பாா்த்தாலும் தண்ணீா் கிடைக்கவில்லை என்று தான் மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பல்லடம் தொகுதி முழுவதும் குடிநீா் பிரச்னை இல்லாத நிலையை உருவாக்குவேன். அடுத்த 50 ஆண்டுகளுக்கு தேவையான வளா்ச்சி திட்டப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவேன். விசைத்தறி மற்றும் கறிக்கோழித் தொழிலில் நிலவும் பிரச்னைகளுக்கு துரித தீா்வு காண்பேன். பல்லடம் தொகுதி எங்கள் கோட்டை எனக் கூறும் அதிமுகவை வீழ்த்துவேன். மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.