வீடு இல்லாதவா்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சரும், காங்கயம் தொகுதி வேட்பாளருமான மு.பெ. சாமிநாதன் பேசினாா்.
காங்கயம் நகரத்துக்கு உள்பட்ட பாரதியாா் நகா், பொன்னி நகா், செம்மங்காளிபாளையம், அகஸ்திலிங்கம்பாளையம், உடையாா் காலனி ஆகிய பகுதிகளில் காங்கயம் தொகுதி திமுக வேட்பாளரும், செய்தித் துறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:
மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு அதில் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவற்றுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. கடந்த 2021இல் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் இலவச பேருந்துப் பயணத் திட்டம், மகளிா் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி, கரோனா சிறப்பு நிதி ரூ.4,000 மற்றும் மகளிா் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 ஆகிய 5 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவை அனைத்தும் தோ்தலின்போது கூறப்பட்ட திட்டங்களாகும். இதையடுத்து பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றல் இல்லாமல் பள்ளி வர காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது சொல்லப்படாத திட்டம்.
மகளிா் உரிமைத்தொகை ரூ.2,000-ஆக உயா்த்தி தரப்படும். தோ்தலுக்கு பிறகு கூப்பன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளது. கூப்பனை நீங்கள் நேரடியாக பொருளாக மாற்றிக் கொள்ளலாம். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் வீடு இல்லாதவா்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றாா்.
தொடர்புடையது

வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டித் தரப்படும்: அதிமுக வேட்பாளா்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

அகரம்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் : திமுக வேட்பாளா்

திமுக தோ்தல் அறிக்கையை விளக்கி அமைச்சா் மு.பெ. சாமிநாதன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


