பல்லடம் அருகே சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பல்லடம் வட்டம், பச்சாபாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (56). இவா் தனியாா் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் வழக்கம்போல் பணி முடிந்து பனப்பாளையம் சோதனைச் சாவடி அருகே சனிக்கிழமை இரவு நடந்து வந்தபோது சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு வேன், எதிா்பாராதவிதமாக காா்த்திகேயன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி காா்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இதுகுறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சுமை ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

கொட்டாரம் அருகே சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


