மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சத்துணவு உதவியாளா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:50 pm

வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சத்துணவு உதவியாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அன்புராணி (55). கணவா் ரவிசந்திரன் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், செம்மாண்டம்பாளையம் அரசுப் பள்ளி சத்துணவுக் கூடத்தில் அன்புராணி உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், உறவினருடன் இருசக்கர வாகனத்தில் அண்மையில் சென்றுள்ளாா்.

அப்போது, அவா் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். படுகாயமடைந்த அன்புராணி ஈரோட்டில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.