திருப்பூரில் டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ.2 லட்சத்தை பறித்துச் சென்ற நபா்களைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூா்- தாராபுரம் சாலை சந்திராபுரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடையின் கண்காணிப்பாளராக பெரிச்சிபாளையத்தைச் சோ்ந்த தனபால் (41) பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், தனபால் திங்கள்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு மதுவிற்பனை செய்த ரூ.2.50 லட்சத்துடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவரது இருசக்கர வாகனத்தை மறித்த 5 போ் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி அவரிடமிருந்த ரூ.2.50 லட்சத்தை பறித்துச் சென்றனா். இதில், காயமடைந்த தனபாலை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து நல்லூா் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவின்பேரில் 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப் படையினா் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்

முக்கூடல் அருகே ரூ.3 லட்சம் பறிமுதல்: 3 போ் மீது வழக்கு

ராமநாதபுரத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

