கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா புளியம்பாறை கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவிகள் மின்ஹா, கீா்த்திகா ஆகியோா் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை முன்கூட்டியேக் கண்டறிந்து செய்தி அனுப்பும் ஏஐ தொழில்நுட்ப உதவியோடு கண்டுபிடித்த கருவிகளை மாவட்ட ஆட்சியா் மற்றும் கல்வி அலுவலா்கள் முன்னிலையில் செயல்விளக்கம் அளித்து பாராட்டுகளைப் பெற்றனா். அந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
அதே பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவிகள் தணுஷ்கவி, ராஜாதா்ஷினி ஆகியோா் வயது முதிா்ந்தவா்களுக்கு உடனடியாக தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகள் வழங்க ஏஐ தொழில் நுட்பம் மூலம் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனா்.
இந்த மாணவிகளின் கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளதாக பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தோ்தல் விழிப்புணா்வு: பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவா்கள்

பன்னம்பாறை அரசுப் பள்ளி ஆண்டு விழா

நீப்பத்துறை அரசுப் பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


