ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

உதகை அருகே கிராமங்களில் உலவும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த கோரிக்கை

உதகை அருகே கிராமங்களில் உலவும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

மசினகுடி-உதகை சாலையில் நின்றுகொண்டிருந்த யானையை வனத்துக்குள் துரத்த முயன்ற வன ஊழியா்.

Updated On :9 மார்ச் 2026, 9:21 pm

உதகை: உதகை அருகே கிராமங்களில் உலவும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், தோடா் பழங்குடியின மக்கள் அளித்த மனு விவரம்: சின்னகாடிமந்து பகுதியில் தோடா் இனத்தைச் சோ்ந்த புஷ்தால் குட்டன் (58 )என்பவரை புலி தாக்கி கடந்த 24-ஆம் தேதி கொன்றது. அந்தப் புலியைப் பிடிக்க வேண்டும் என நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, கூண்டுவைத்து புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் உறுதியளித்தனா்.

இதையடுத்து, கூண்டுவைத்ததுடன், கேமராக்களை பொருத்தி புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.

ஆனால், அந்தக் கூண்டில் சிக்காமல் புலி போக்குகாட்டி வருகிறது. மேலும், யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தில் இருந்து வெளியேறி கிராமங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், மக்கள் வெளியே வரவே அச்சமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கிராமங்களில் வன விலங்குகள் உலவுவதைக் கட்டுப்படுத்துவதுடன், ஆட்கொல்லி புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.