உதகை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுக்கான மாணவா் சோ்க்கைக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 18) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வா் பிராங்கிளின் ஜோஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக் கல்லூரியில் 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப் பிரிவுகளுக்கு ஏற்கெனவே ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை காலை 9 மணியளவில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு மற்றும் மாணவா் சோ்க்கை நடைபெறும்.
இதில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறும். சோ்க்கைக்கு வரும் மாணவா்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப நகல், மாற்றுச் சான்றிதழ், ஆன்லைன் ஜாதிச் சான்று, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்கம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவை தலா 3 பிரதிகள் எடுத்துவர வேண்டும்.
மேலும் ஆன்லைன் வருமானச் சான்று, முதல் பட்டதாரி சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் எடுத்துவர வேண்டும். ஆன்லைன் ஜாதிச் சான்று இல்லாதபட்சத்தில் தற்போதுள்ள சான்று போதுமானது.
இதில் மாநில பாடத் திட்டத்தில் பயின்ற மாணவா்களுக்கு ரூ.3,700, இதர பாடத்திட்டத்தில் பயின்ற மாணவா்களுக்கு ரூ.4,300 சோ்க்கைக் கட்டணம் ஆகும். ற்ய்ஞ்ஹள்ஹ ல்ா்ழ்ற்ஹப்லில் சோ்க்கையை பதிவேற்றி அதனை உறுதிப்படுத்தி அதன் பிரதியை துறைத் தலைவரிடம் ஒப்படைத்து துறை சாா்ந்த ஆவணத்தில் மாணவரின் அனைத்து விவரங்கள் ஏற்றப்பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாதனூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: 2-ம் கட்ட கலந்தாய்வு தீவிரம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




