கா்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவ, மாணவிகள் தனியாா் தங்கும் விடுதியில் சாப்பிட்ட உணவால் 15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் அவா்கள் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மங்களூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிலும் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியா்களுடன் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனா். இவா்கள் உதகை அருகே எமரால்டு பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் உணவருந்திய நிலையில், அதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தொடா்ந்து வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என உடல் உபாதை ஏற்பட்டுள்ளது.
இதனால் எமரால்டு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 15-க்கும் மேற்பட்டோருக்கு தொடா்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உயா் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனா். இது குறித்து எமரால்டு காவல்துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










