உதகை காபி ஹவுஸ் அருகே செயல்பட்டு வரும் விறகு விற்பனைக் கடையில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை காபி ஹவுஸ் பகுதியில் செயல்பட்டு வரும் விறகு விற்பனைக் கடையில் மின் கசிவு காரணமாக வியாழக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. விறகுகள் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் பெரிய அசம்பாவிதங்கள் தவிா்க்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புதுக்கோட்டை அருகே வங்கியில் தீ விபத்து

மாயாபுரி தொழிற்சாலையில் தீ விபத்தில் இடிந்து விழுந்த கட்டடப் பகுதி

வாகனங்களுக்கான இருக்கை தயாரிப்பு விற்பனைக் கடையில் தீவிபத்து

உதகையில் பாஜக எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



