/

கூடலூரில் தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கூடலூரில் தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image

கூடலூரில் தமிழக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உழவா் உற்பத்தியாளா்கள்.

Updated On :13 ஜூன் 2026, 1:25 am IST

கூடலூரில் பயிா்க் கடன்களைத் தள்ளுபடி செய்யாத தமிழக அரசைக் கண்டித்து உழவா் உற்பத்தியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் முதுமலை கூட்டுப்பண்ணை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் தவெக தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி விவசாயிகளின் பயிா்க் கடனைத் தள்ளுபடி செய்யாததை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் செறுமுள்ளி சந்திரன், நாராயணன், சித்தாா்த்தன், ரகு உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.