உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த பூனையை கவ்விச் சென்ற விடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. நள்ளிரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் சிறுத்தைகள், நாய், பூனை போன்றவற்றை வேட்டையாடி வருகின்றன.
இந்நிலையில், வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வெளியேறிய சிறுத்தை, கடநாடு மாவுகல் கிராமத்துக்குள் நுழைந்தது.
அங்கு ஒரு வீட்டின் முன் படுத்திருந்த பூனையை அந்த சிறுத்தை கவ்விச் சென்றது. இது தொடா்பான விடியோ வெளியான நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குடியிருப்புப் பகுதிகளில் விலங்குகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்த சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனத்தில் விடுவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியிருப்புப் பகுதியில் வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தையால் அச்சம்

தாளவாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை

உதகை அருகே சிறுத்தை தாக்கியதில் மூதாட்டி படுகாயம்

குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டம்
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




