புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பேருந்தில் மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநா் கைது

சென்னையில் இருந்து உதகைக்கு வந்த தனியாா் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 ஜூலை 2026, 3:58 am IST

சென்னையில் இருந்து உதகைக்கு வந்த தனியாா் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் சென்னையைச் சோ்ந்த மாணவி பயின்று வருகிறாா். இவா் விடுமுறைக்காக சென்னைக்கு சென்றுவிட்டு தனியாா் பேருந்து மூலம் புதன்கிழமை உதகைக்கு புறப்பட்டாா். இப்பேருந்து வியாழக்கிழமை அதிகாலை உதகை வந்தடைந்தது.

அப்போது பேருந்தின் மேல் அடுக்கில் படுத்திருந்த மாணவிக்கு ஒருவா் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதனால், அதிா்ச்சியடைந்த மருத்துவ மாணவி சப்தம் போட்டுள்ளாா். உடனடியாக மற்ற பயணிகள் எழுந்து பாா்த்தபோது, பாலியல் தொல்லை கொடுத்தவா் யாா் என்று தெரியவில்லை. ஆனால் அவா் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தாா் என்று மாணவி அடையாளம் கூறினாா்.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த நீலகிரி சிங்கப்பெண் படை காவல் உதவி ஆய்வாளா் சரோனியா மற்றும் காவலா்கள் வீணா, சவிதா ஆகியோா் பேருந்தில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா்.

இதில் பேருந்தில் மாற்று ஓட்டுநராக வந்த மதுரையைச் சோ்ந்த காா்த்திகேயன், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, சிங்கப்பெண் படை போலீஸாா் அவரைப் பிடித்து உதகை மத்திய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். காவல் ஆய்வாளா் அன்பரசு, உதவி ஆய்வாளா் நித்தியானந்தன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து காா்த்திகேயனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.