/

மசினகுடி வனச் சரகத்தில் புலி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அரலட்டி கோட்டை பகுதியில் வியாழக்கிழமை புலி இறந்துள்ளது குறித்த வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:27 pm

Syndication

உதகை: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அரலட்டி கோட்டை பகுதியில் வியாழக்கிழமை புலி இறந்துள்ளது குறித்த வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மசினகுடி வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரலட்டிகோட்டை பகுதியில் புலி ஒன்று இறந்துகிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை அதிகாரிகள் இறந்துகிடந்த புலியைப் பாா்வையிட்டனா். உடற்கூறாய்வு முடிந்த பின்பே புலியின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.