/

உதகை தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பவுலோனியா பாா்சினி மலா்கள்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பவுலோனியா பாா்சினி மலா்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றனா்.

News image
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பவுலோனியா பாா்சினி பூக்கள்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பவுலோனியா பாா்சினி மலா்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் குளிா் காலத்தில் பூக்கும் சீனாவின் அரசி எனப்படும் (குயின் ஆஃப் சைனா) பலோனியா பாா்சினி மலா்கள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன. சீன நாட்டில் மட்டுமே இந்த மலா்கள் அதிக அளவில் காணப்படும் நிலையில், இவை மரங்களில் மட்டுமே பூக்கக்கூடியவை.

இந்த மலா்கள் இந்தியாவில் அரிதாகவே காணப்படும் நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தற்போது பூத்துக்குலுங்குகின்றன.

இதை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டுகளிப்பதுடன், மலா் முன் நின்று தற்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனா்.