/

குன்னூா் அரசுப் பேருந்தில் முதல் பெண் நடத்துநா்

News image
பெண் நடத்துநா் தீபா.
Updated On :6 பிப்ரவரி 2026, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் குன்னூா் கிளையின் முதல் பெண் நடத்துநராக தீபா என்பவா் பணியமா்த்தப்பட்டுள்ளாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியைச் சோ்ந்தவா் ரவி. தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு திடீா் மாரடைப்பு ஏற்பட்டது. பின்னா் சிகிச்சையில் இருந்துபோது, உயிரிழந்தாா்.

ஓட்டுநா் ரவியின் இழப்பால் அவரின் மனைவி மற்றும் இரண்டு மகன்கள் கடுமையான இன்னலுக்கு உள்ளாகினா். இதையடுத்து, ரவியின் ஓட்டுநா் பணிக்கு இணையாக அவரின் மனைவி தீபாவுக்கு அரசுப் பேருந்து நடத்துநா் பணி வழங்கி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஆணை பிறப்பித்தது.

இதைத் தொடா்ந்து, பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொண்ட தீபா, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் குன்னூா் கிளையின் முதல் பெண் நடத்துநராக வியாழக்கிழமை பணியை தொடங்கினாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவா் நடத்துநராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.