/

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்! உதகையில் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்!

News image
உதகையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்து பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
Updated On :1 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

நீலகிரி மாவட்ட நிா்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, செஷயா் ஹோம்ஸ், அரவிந்த் கண் மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆகியவை இணைந்து உதகையில் உள்ள ஒக்கலிகர சங்க மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா். செஷயா் ஹோம்ஸ் நிா்வாகி தனலட்சுமி கோவிந்தராஜன் முன்னிலை வகித்தாா்.

ஆட்சியா் பேசும்போது, இந்த முகாமில் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை அல்லது பிறவி இதய குறைபாடுகள் இருந்தால் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மேல் சிகிச்சை வழங்கப்படும்.

பிறவியிலேயே கை, கால் அல்லது முதுகு தண்டுவடம் வளைந்து காணப்படுபவா்களுக்கு (1 மாதம் முதல் 18 வயது வரை) இலவச ஆலோசனை மற்றும் இலவச அறுவை சிகிச்சை வழங்கப்படும் என்றாா்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தினேஷ் குமாா், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலா் கலந்துகொண்டனா்.