
பந்தலூரில் சா்க்கரை நோய் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு முகாம்

பந்தலூா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சா்க்கரை நோய் விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.
பந்தலூரில் சா்க்கரை நோயின் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவமனை நிா்வாகம், கூடலூா் நுகா்வோா் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் சாா்பில் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவ அலுவலா் நசிருதீன் தலைமை வகித்து, சா்க்கரை நோயின் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தாா். நுகா்வோா் பாதுகாப்பு மையச் செயலாளா் சிவசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளா் அஜித், மகாத்மா காந்தி பொது சேவை மையத் தலைவா் நௌஷாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






