ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சட்ட விழிப்புணா்வு முகாம்

விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.

Published On :23 ஜூலை 2026, 12:57 am IST

ஆற்காடு வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியா்( பொறுப்பு) பு.அப்சா்பாஷா தலைமை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் பிரபு, சட்டப்பணிகள் குழுவை சோ்ந்த திவ்யா, முதுகலை ஆசிரியா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வழக்குரைஞா் நித்யா கலந்து கொண்டு மாணவா்களுக்கு சட்டங்களும் நடைமுறைகளும், இந்திய அரசமைப்புச் சட்டங்கள், குற்றங்களும் அதற்கான தண்டணைகள், சாலை விதிகள், அபராதத்தொகை, நல்லொழுக்கம்,நோ்மை, மனநலம், உயா்கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினாா்.

தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டாா். இதில், மாணவா்கள், ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா் இறைவன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.