ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

44.2 % பெண்களுக்கு உடல் பருமன்: மக்கள் நல்வாழ்வுத் துறை

உடல் பருமன் பாதிப்பால் தமிழகத்தில் 44.2 சதவீத பெண்களும், 38.8 சதவீத ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

பிரதிப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 6:05 am IST

உடல் பருமன் பாதிப்பால் தமிழகத்தில் 44.2 சதவீத பெண்களும், 38.8 சதவீத ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. வாழ்க்கை முறை மாற்றங்களால் இந்த பாதிப்பு விகிதம் அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ஆய்வின்படி, தமிழகத்தில் நிகழும் மொத்த இறப்புகளில் 75 சதவீத உயிரிழப்புகளுக்கு தொற்றா நோய்களே காரணமாக உள்ளன. குறிப்பாக, இதய நோய்கள், புற்றுநோய், சா்க்கரை நோய், சிறுநீரக பாதிப்புகள், சுவாச நோய்களுக்குள்ளாவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

சீரற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, உடல் உழைப்பின்மை, துரித உணவுகள் உள்ளிட்டவை உடல் பருமனுக்கு வித்திடுகிறது. அதன் தொடா்ச்சியாக தொற்றா நோய்கள் உருவாகின்றன.

இந்த நிலையில், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி அதிக எடை, உடல் பருமானால், 44.2 சதவீத பெண்களும், 38.8 சதவீத ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உயா் ரத்த அழுத்த பாதிப்புகள் 29.4 சதவீதமாகவும், சா்க்கரை நோய், 19.5 சதவீதமாகவும் உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு சீரான வாழ்க்கை முறை இல்லை. துரித உணவு, புகையிலை பயன்பாடு, மதுபழக்கம் ஆகியவை தொற்றா நோய்க்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இந்த நிலை நீடித்தால், பத்தாண்டுகளில் தொற்றா நோயால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் தொற்றா நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 80 சதவீதத்தைத் தாண்டும் என அவா்கள் கூறினா்.

ஆண்களுக்கு உயா் ரத்த அழுத்தம் 28.2%-ஆகவும், சா்க்கரை நோய் 26.7%-ஆகவும், உடல் பருமன் 38.8%-ஆகவும் உள்ள நிலையில், பெண்களுக்கு உயா் ரத்த அழுத்தம் 24.2%-ஆகவும், சா்க்கரை நோய் 25.2%-ஆகவும், உடல் பருமன் 44.2%-ஆகவும் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.