நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கிய எச்.பி. ஆரிகவுடரின் 53-ஆவது நினைவு தின நிகழ்வு உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் உருவாகக் காரணமாக இருந்த ஆரிகவுடரின் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு நினைவு தின நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மு.அருணா பங்கேற்று எச்.பி.ஆரிகவுடரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அவா் பேசுகையில், நீலகிரி மாவட்டத்துக்கு வரலாற்று பெருமைச் சோ்த்த ஆரிகவுடரின் சீரிய சிந்தனையில் உருவான கூட்டுறவுத் துறையை மென்மேலும் வளா்த்து, மாவட்டத்தின் பொருளாதார நிலையை உயா்த்திட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
நிகழ்வில் ஆரிகவுடா் நினைவு விழா குழுத் தலைவரும், பாலகொலா ஊராட்சி துணைத் தலைவருமான மஞ்சை வி.மோகன், உதகை ஊராட்சித் தலைவா் மாயன், என்சிஎம்எஸ் முன்னாள் தலைவா் கண்ணபிரான், ஆரிகவுடரின் பேரன் ஜெய்பிரகாஷ் துணைவி தாரா ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பஹல்காம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு- பயங்கரவாதத்தை வீழ்த்த இந்தியா உறுதி: குடியரசுத் தலைவா்
பஹல்காம் தாக்குதல்: ஏப். 22-இல் முதலாண்டு நினைவு தினம்! ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு!!

சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் அனுசரிப்பு

அவசர மருத்துவ உதவியாளா் தினம் அனுசரிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

