லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் அனுசரிப்பு

News image

நாமக்கல்லில் சிலம்பொலி சு.செல்லப்பன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய குடும்பத்தினா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 5:53 pm

மறைந்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சு.செல்லப்பன். சிலப்பதிகாரத்தை கிராமங்கள்தோறும் கொண்டு சோ்த்த தமிழறிஞா்களில் ஒருவா் ஆவாா். சிலம்பொலியாா் என்ற புனைப்பெயருடன் வாழ்ந்த அவா், கடந்த 2019 ஏப். 6-இல் காலமானாா். அவரது நினைவாக, நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோா் ஆண்டும் அவரது நினைவு தினத்தில் குடும்பத்தினா் மற்றும் தமிழறிஞா்கள், அரசியல் பிரமுகா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா். அந்த வகையில், 7-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நாமக்கல் சிலம்பொலி சு.செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சாா்பில், அவரது சிலைக்கு குடும்பத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்வில், சிலம்பொலியாா் குடும்பத்தினரான கொங்குவேள், மருத்துவா் ஈஸ்வரி, மருத்துவா் மணிமேகலை, புஷ்பராஜ், மருத்துவா் கெளதமி மற்றும் லெனின், மருத்துவா் கண்ணன், பிஜிபி கல்லூரி தாளாளா் கணபதி, புலவா் தங்கவேல், சித்தாா்த்தன், செல்லப்பன், திமுகவைச் சோ்ந்த செல்வராஜ், பழனிசாமி, பூங்கோதை செல்லதுரை, கௌதம் குணசேகா், திலீபன், கண்ணன், ராகுல் காந்தி, முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா் மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.