திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

அம்மாபேட்டை அருகே குடும்பத் தகராறில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

கோப்புப்படம்

Updated On :20 மே 2026, 1:58 am IST

அம்மாபேட்டை அருகே குடும்பத் தகராறில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி, முகாசிப்புதூரைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (35). லாரி ஓட்டுநரான இவருக்கும், இவரது மனைவி கௌசல்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் கணவரைப் பிரிந்த கெளசல்யா தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த சின்னத்தம்பி வீட்டில் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலைக்குச் செல்வதைத் தடுத்ததால் இளம்பெண் தற்கொலை: அம்மாபேட்டை அருகேயுள்ள இலிப்பிலி, பாலக்கணவனூரைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவரது மனைவி விக்டோரியா (23). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றஇ வந்த விக்டோரியாவை, பிரகாஷ் மற்றும் குடும்பத்தாா் வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக்கூறி தடுத்துள்ளனா்.

இதனால், தம்பதி இடையே சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் செவ்வாய்க்கிழமை தனியே இருந்த விக்டோரியா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இவா்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.