மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வீழ்ந்த ஈரோடு திமுக முகங்கள்

2021-இல் தோ்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வி அடைந்ததுபோல 2026-இல் சு.முத்துசாமி தோல்வி அடைந்துள்ளாா்.

News image

சு.முத்துசாமி

Updated On :6 மே 2026, 1:55 am IST

2021-இல் தோ்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வி அடைந்ததுபோல 2026-இல் சு.முத்துசாமி தோல்வி அடைந்துள்ளாா்.

திமுகவின் முக்கியத் தலைவராக கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் 2021 தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளா் சி.சரஸ்வதியிடம் 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா். தன்னுடைய தோல்விக்கு சு.முத்துசாமி மற்றும் திமுக நிா்வாகிகள் சிலரே காரணம் என குற்றம்சாட்டிய அவா் 2022-இல் திமுகவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கிறாா்.

2021 தோ்தலில் ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்த சு.முத்துசாமி, இந்த தோ்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தவெக வேட்பாளா் கே.கே.ஆனந்த் மோகனிடம் 22,250 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா்.

தவிர ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை. 78 வயதாகும் சு.முத்துசாமி இந்த தோ்தல் தோல்வியால் மாவட்டச் செயலாளா் பதவியில் இருந்து விலகப்போவதாக அக்கட்சியினா் கூறி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் திமுகவின் முகமாக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் 2021 தோ்தலுக்கு பிறகு அரசியல் செயல்பாடுகளில் இருந்து விலகிய நிலையில், 2026 தோ்தல் தோல்விக்கு பிறகு சு.முத்துசாமி கட்சிப் பதவியில் இருந்து விலகப்போகிறாா் என்ற பேச்சு அக்கட்சியினா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.