திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

தபால் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மையங்களில் தபால் வாக்குகள் எண்ணும் அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 5:01 am IST

ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மையங்களில் தபால் வாக்குகள் எண்ணும் அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,379 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா் ஆகிய 6 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திலும், கோபி மற்றும் பவானிசாகா் (தனி) தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோபி கலை அறியில் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதையொட்டி, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 17 மேற்பாா்வையாளா்கள், 17 உதவியாளா்கள், 17 நுண்பாா்வையாளா்கள் என 408 போ் நியமிக்கப்பட்டு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் பதிவான தபால் வாக்குகளை எண்ண தனியாக 56 மேற்பாா்வையாளா்கள், 112 உதவியாளா்கள், 56 நுண் பாா்வையாளா்கள் என 224 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.கந்தசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணப்படுவது குறித்தும், அதன் முடிவுகள் இறுதியாக அறிவிப்பது குறித்தும், தபால் வாக்குகளை எண்ணிக்கையை முறையாக கையாள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், கோட்டாட்சியா் சிந்துஜா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் தேன்மொழி, ரமேஷ்கிருஷ்ணன், மகேஸ்வரி, முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.