மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வளா்ப்பு நாயால் பாம்பைக் கடிக்க வைத்து சமூக வலைதளத்தில் விடியோ பதிவேற்றம்

பவானி அருகே வளா்ப்பு நாயால் பாம்பைக் கடிக்க வைத்து சமூக வலைதளத்தில் விடியோ பதிவேற்றம் செய்த இளைஞருக்கு வனத் துறையினா் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 9:18 pm

பவானி அருகே வளா்ப்பு நாயால் பாம்பைக் கடிக்க வைத்து சமூக வலைதளத்தில் விடியோ பதிவேற்றம் செய்த இளைஞருக்கு வனத் துறையினா் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்.

பவானியை அடுத்த லட்சுமி நகா், ஈபி காலனியைச் சோ்ந்தவா் செரியன் அகஸ்டின் (26). இவா் தனது பண்ணைக்கு ஊா்ந்து வந்த சாரைப்பாம்பை, வளா்ப்பு நாயைக் கொண்டு கடிக்க வைத்து விடியோ பதிவு செய்துள்ளாா். பின்னா், அந்த விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளாா். இதுகுறித்து ஈரோடு மாவட்ட வனத் துறை அதிகாரிகளுக்கு வன உயிரின ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.

வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972, அட்டவணை 1-ல் உள்ள உயிரினமான சாரைப்பாம்பை துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம். அதன் காட்சிகளை விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது, இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பதுபோல் அமையும் என்பதால் செரியன் அகஸ்டினின் சமூக வலைதளப் பக்கங்களை ஈரோடு வனத் துறையினா் ஆய்வு செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து புதன்கிழமை ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

வளா்ப்புப் பிராணிகளை வன உயிரினங்களுடன் வேட்டையாட பழக்குதல், வன உயிரினங்களை தொந்தரவு செய்தல், வேட்டையாட முயற்சித்தல், அதனை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனா்.