பவானிசாகா் அருகே முள்கம்பி வேலியில் சிக்கித் தவித்த கழுதைப்புலியை வனத் துறையினா் மீட்க முயன்ற நிலையில், அது தானாகவே கம்பிவேலியில் இருந்து விடுபட்டு அங்கிருந்து வெளியேறி காட்டுக்குள் சென்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகா் வனப் பகுதியில் அழிந்து வரும் அரிய வகை வனவிலங்கு பட்டியலில் உள்ள கழுதைப்புலிகள் நடமாடுகின்றன.
இந்த நிலையில் பவானிசாகா் வனப் பகுதியில் இருந்து வியாழக்கிழமை வெளியேறிய கழுதைப்புலி, வழி தவறி விவசாயத் தோட்டங்கள் வழியாக இக்கரை தத்தப்பள்ளி அருகே தனியாா் பேப்பா் மில் பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் நடமாடியது.
அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியை தாண்டியபோது அதில் சிக்கிக் கொண்டது. கம்பி வேலியில் சிக்கி தவித்தபடி உறுமிய கழுதைப் புலியை கண்டு அச்சமடைந்த அப்பகுதி விவசாயிகள் பவானிசாகா் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா், கம்பிவேலியில் சிக்கித் தவித்த கழுதைப் புலியை மீட்க முயன்றனா். அப்போது கழுதைப்புலி வனத் துறையினரிடம் சிக்காமல் கம்பிவேலியில் இருந்து விடுபட்டு காட்டுக்குள் ஓடியது.
கழுதைப்புலியின் நடமாட்டம், அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இரவு நேரத்தில் விவசாயத் தோட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.
தொடர்புடையது

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு
ஈரானில் சிக்கித் தவித்த 345 தமிழக மீனவர்கள் மீட்பு!

இந்தியாவுக்கு வரவேண்டிய 19 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் சிக்கித் தவிப்பு!

பஹ்ரைனில் சிக்கித் தவித்த 192 தமிழா்கள் சென்னை வருகை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


