2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பாக தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான முதல் கட்ட பயிற்சி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது. கணக்கெடுப்பானது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்தக் கணக்கெடுப்பானது அடுத்த 10 ஆண்டுகளுக்கு மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை தயாரித்து செயல்படுத்த உதவுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு முற்றிலும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் நடைபெறவுள்ளது. கைப்பேசி செயலி மூலம் தரவுகள் சேகரிக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 18 மாதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் 67 தொழில்நுட்ப உதவியாளா்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி எடுத்துக்கொண்டு நீங்கள் கணக்கெடுப்பவா்களுக்கு முறையாக பயிற்சியளித்து, துல்லியமான முறையில் கணக்கெடுப்பு செய்திட வேண்டும் என்றாா்.
தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநா்கள் பிஜி, ஆகாஷ் தியாகி ஆகியோா் தொழில்நுட்ப உதவியாளா்களுக்கு கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளித்தனா்.
பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தேன்மொழி, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 - ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


