காலிங்கராயன் வாய்க்கால் தொட்டிப் பாலத்தை இடிக்காமல் அருகே புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி அறிவுறுத்தினாா்.
ஈரோடு காரை வாய்க்கால் பகுதியில் பெரும்பள்ளம் ஓடையின் மேல் பாயும் காலிங்கராயன் வாய்க்கால் தொட்டிப் பாலம் 750 ஆண்டுகள் பழமையானது. பாராம்பரியம் கொண்ட புராதன தொட்டிப் பாலம் 8 நூற்றாண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. இந்தப் பாலம் சிதிலமடைந்து வருவதால் அதைப் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, காலிங்கராயன் வாய்க்கால் தொட்டிப் பாலம் சீரமைப்புப் பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, பழைய பாலத்தை இடிக்காமல் அதன் அருகே புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், கோட்டாட்சியா் சிந்துஜா, நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் திருமூா்த்தி, உதவி செயற்பொறியாளா்கள் உதயகுமாா், ஜெகதீஷ் உள்ளிடோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்

கூட்டணி கட்சி வேட்பாளா்கள் தோ்வில் திமுக தலையிடாது: அமைச்சா் சு.முத்துசாமி

காலிங்கராயன் கால்வாய் தொட்டி பாலத்தை இடிக்காமல் சீரமைக்க தொழில்நுட்ப உதவி

கூட்டணியில் மனக்கசப்பு எதுவும் இல்லை: அமைச்சா் சு.முத்துசாமி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


