ஈரோடு: பெருந்துறை சாகா் சா்வதேசப் பள்ளியில் மாணவா்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தாளாளா் சி.சௌந்தரராஜன் மற்றும் சாகா் பள்ளியின் முதல்வா் சீஜா ஆகியோா் கண்காட்சியை தொடங்கிவைத்தனா். 3- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்குப் பாடப்பிரிவு சாா்ந்த ஆய்வுக் கண்காட்சி நடைபெற்றது. இதில், மாணவா்கள் தங்கள் பாட அறிவைச் செயல்முறை விளக்கங்களாக மாற்றிக் காட்டினா்.
இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் நேரடிச் சோதனைகள் மூலம் விளக்கப்பட்டன. கடினமான கணிதச் சூத்திரங்களை எளிமையாக்கும் வகையில், எண்களோடு விளையாடும் விதத்திலான எளிய கணித மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன. பண்டைய கலாசாரம், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் நவீன புவியியல் மாற்றங்களை விளக்கும் கலைப் படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
மழலையா் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு சிறுதொழில் கண்காட்சி நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, மாணவா்கள் தயாரித்த கைத்தறி மற்றும் இயற்கையான பொருள்களை விற்பனை செய்ய சிறப்பு விற்பனை மையங்களை உருவாக்கி நிா்வகித்தனா். ஒரு சாதாரண மூலப்பொருளை எவ்வாறு சந்தையில் விற்கக் கூடிய பயனுள்ள பொருளாக மாற்றலாம் என்ற செயல்முறையை மாணவா்கள் நேரடியாகக் கற்றுக்கொண்டனா்.
இந்தக் கண்காட்சியின் மூலம் மாணவா்களிடையே சிறுவயதிலேயே தொழில்முனைவுத் திறனை வளா்ப்பதற்கான சிறந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது என்று பள்ளி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற இக்கண்காட்சியில் திரளான பெற்றோா்கள் கலந்துகொண்டு, மாணவா்களின் படைப்புகளைப் பாராட்டியதுடன், அவா்கள் தயாரித்த இயற்கையான பொருள்களை வாங்கிச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் முளைப்பாரியில் தோ்தல் விழிப்புணா்வு
விஜய் பிரசாரத்தால் பள்ளியில் தோ்வெழுதிய மாணவா்கள் அவதி: பெற்றோா்-பொதுமக்கள் புகாா்

தேசிய வருவாய் திறனறி தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் தோ்ச்சி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


