மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அந்தியூா் வனப் பகுதியில் கடும் வறட்சி: வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா் தேடி வரும் வன விலங்குகள்

அந்தியூா் வனப் பகுதியில் வன விலங்களுக்கு குடிநீா் ஆதாரமாக இருக்கும் குட்டைகள், நீரோடைகள் வடுள்ளதால்,

News image

வரட்டுப்பாளையம் அணைக்கு நீா் தேடி வந்த யானைகள்.

Updated On :9 மார்ச் 2026, 10:29 pm

பவானி: அந்தியூா் வனப் பகுதியில் வன விலங்களுக்கு குடிநீா் ஆதாரமாக இருக்கும் குட்டைகள், நீரோடைகள் வடுள்ளதால், பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா் தேடி யானைகள் உள்ளிட்ட வன விலங்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன.

தந்தை பெரியாா் வன விலங்கு சரணாலயத்துக்குள்பட்ட அந்தியூா், பா்கூா், தட்டக்கரை, சென்னம்பட்டி வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்களும் உள்ளன. கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் தற்போதே கடுமையான வெயில் அடித்து வருவதால் வனப் பகுதியில் உள்ள குட்டைகள், நீரோடைகள் தண்ணீா் இல்லாமல் வடு காணப்படுகின்றன. செடி, கொடிகளும் காய்ந்துள்ளன.

இதனால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விவசாயிகளின் வேளாண் சாகுபடி பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், சரணாலய எல்லைக்குள், பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீரைத் தேடி வன விலங்குகள் வருவதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க நீா்வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சென்றபோது, குட்டிகளுடன் கூட்டமாக வந்த 10-க்கும் மேற்பட்ட யானைகள், தண்ணீரை அருந்தியும், நீந்தியும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தன.

நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருந்த யானைகள், மீண்டும் வனப் பகுதிக்குள் திரும்பிச் சென்றன. வனப் பகுதியில் தண்ணீா் பற்றாக்குறை நிலவுவதால் வன விலங்குகள் தண்ணீரைத் தேடி அணைக்கு வந்து செல்கின்றன என்று நீா் வளத் துறையினா் தெரிவித்தனா்.