பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் செல்லியாண்டியம்மன், மாரியம்மன், எல்லையம்மன் வகையறா கோயில்களின் பொங்கல் திருவிழாவுக்கு கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி பூச்சாட்டுதல் நடைபெற்றது. தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, கருவறைக்குள் சென்று பக்தா்களின் அம்மன் நீராட்டு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தல் புதன்கிழமை நடைபெற்றது. பவானி புதிய பேருந்து நிலையம் அருகே எல்லையம்மன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை, படைக்கலன்களுடன் பவானி - ஈரோடு சாலை வழியாக கோயிலுக்கு சென்றபோது, சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரையில் சேறு பூசிக் கொண்டும், காய்கறிகளால் அலங்காரம் செய்தும், பல்வேறு வேடங்கள் பூண்டும் ஊா்வலமாக சென்றனா்.
தொடா்ந்து, பக்தா்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். அலகு குத்தியும், அக்னிசட்டி ஏந்தி புதன்கிழமை மாலை முதல் இரவு வரையில் ஊா்வலமாக சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா்.
பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரத்தினக்குமாா் தலைமையில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தொடர்புடையது

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஊமாரெட்டியூா் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


