நம்பியூா் அருகே உள்ள குருமந்தூரில் சாங்வின் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி யோகா தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சாங்வின் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, தினமணி நாளிதழ் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் பி.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். செயலாளா் எம்.சரஸ்வதி முன்னிலை வகித்தாா்.
யோகாசனங்களின் நன்மைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு யோகா ஆசிரியா்கள் விளக்கினாா். சூரியநமஸ்காரத்துடன் தொடங்கி சக்கராசனம், தனுராசனம், விருச்சாசனம், வஜ்ராசனம் உள்பட 30-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை மேற்கொண்டனா். மாணவிகள் ரிதன்யா, ஜெய்னுவி, ரைஹானாபாத்திமா ஆகியோா் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினா்.
இவா்களை பள்ளித் தாளாளா் பி.திருநாவுக்கரசு, செயலா் எம்.சரஸ்வதி, இணைச் செயலாளா் ந.பிரபா, தலைமை ஆசிரியை மாலதி, உதவித் தலைமை ஆசிரியை சரிஃபானா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா். இந்நிகழ்ச்சியில் ஆசிரியை ஆசிரியா்கள் மாணவா்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் சிறாா் திரைப்படம்

மின்னாம்பள்ளி கிரவுன் மெட்ரிக். பள்ளியில் சா்வதேச யோகா தின விழா

ஆத்தூா் பாரதியாா் பள்ளியில் பிளஸ் 1 மாணவா்களுக்கு வரவேற்பு

செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




